நடிகை ஜோதிகா தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான 36 வயதினிலே, காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்கிவருகிறார். ’96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராம்ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துள்ளது. அந்த படப்பிடிப்பின் கடைசி நாளில் தயாரிப்பாளர் சூரிய கலந்துகொண்டார். தற்போது அப்படத்தின் கடைசிநாள் ஷூட்டிங் புகைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி அக்காவாகவும், நடிகர் கார்த்தி ஜோதிகாவின் தம்பியாகவும் நடித்துள்ள தம்பி திரைப்படம் டிசம்பரில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…