பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகாக மும்பை சென்ற நடிகை பூஜா ஹெக்டே சென்னை திரும்பியுள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டு முடிவடைந்து. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகை பூஜா ஹெக்டே வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார்.
இந்நிலையில், தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கவுள்ளதால் மும்பை சென்றிருந்த பூஜா ஹெக்டே தற்போது சென்னை வந்துள்ளார். விறு விறுவென படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், படத்திலிருந்த்து விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…