விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் உச்சரிக்க வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முழுமுதல் கடவுளான விநாயகப்பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி இதில் பார்க்கவுள்ளோம். நமக்கு எந்த துன்பம் வந்தாலும் அதனை விட்டு விலக விநாயகப்பெருமானை மனதார வழிபட்டாலே போதும். எவ்வளவு பெரிய சிக்கலானாலும் அதிலிருந்து நம்மை காத்தருள உடன் இருப்பார். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து தூய்மையாக குளித்து விட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
அன்று கோவிலுக்கு சென்று விநாயகருக்கு பிடித்த அருகம்புல் வாங்கி கொடுக்கலாம். விநாயகருக்கு அர்ச்சனை செய்து விட்டு 3 தோப்புக்கரணங்களை போட்டுகொண்டு, கூடவே 3 பிள்ளையார் கொட்டுக்களையும் கொட்டி கொள்ள வேண்டும். இதனை அடுத்து பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது நவ கிரகங்களின் சன்னிதானத்தில் 9 முறை நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். அவ்வாறு சுற்றும் பொழுது விநாயருக்கான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
எவ்வளவு முறை வேண்டுமானாலும் மந்திரத்தை உச்சரிக்கலாம். இதற்கு ஏதும் கணக்கு கிடையாது. ஆனால், ஒரு முறையாவது உச்சரித்து கொள்ள வேண்டும். பின்னர் விநாயகரை 3 முறை வலம் வரும் பொழுதும் விநாயகர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உச்சரிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த விநாயகர் மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓம் ஓங்காரமே போற்றி
ஓம் அஷ்ட கணபதியே போற்றி
ஓம் மூலவரே கணேசா போற்றி
ஓம் மஞ்சளில் ஆன மங்கலமே போற்றி
ஓம் சிவசக்தி மைந்தனே போற்றி
ஓம் கந்தனின் மூத்தோனே போற்றி
ஓம் முக்கடவளுக்கும் கடவுளே போற்றி
ஓம் சங்கடஹர சதுர்த்தியானே போற்றி
ஓம் நவக்ரஹ தோஷத்தினை கரைபவனே போற்றி
போற்றி போற்றி என போற்றிடுவேன் நித்தம் நித்தம் என் மூச்சு உள்ளவரை
ஓம் மூஷிக வாகனா போற்றி.
இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். அன்று கோவிலுக்கு செல்லாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் திருவுருவ படத்திற்கு முன்பு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரியுங்கள். மந்திரம் உச்சரித்த பின்னர் உங்களது மனக்கஷ்டத்தை அவர் முன்பு எடுத்து வையுங்கள். அனைத்து சங்கடங்களுக்கும் விரைவிலேயே விமோச்சனம் கிடைத்து விடும். இதனை விநாயகர் சதுர்த்தி மற்றும் மாதம்தோறும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று உச்சரித்து அனைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுபடுங்கள்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…