அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் மாயமாகியுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் பெரும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வீடுகளின் கூரை வரை சூழ்ந்து காணப்படும் நிலையில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்கள் அனைவருக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் வெள்ள நிவாரண பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…