என் சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் – பசுபதி பேட்டி.!

ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் என் சினிமா வாழ்க்கையில், மிகவும் நெருங்கியவன் முக்கியமானவன் என்று நடிகர் பசுபதி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் பசுபதி, ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் மிவும் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பசுபதி கூறியது ” சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் பா.ரஞ்சித்க்கு நன்றி. என்னை ரங்கன் வாத்தியாரக செதுக்கியதற்கு நன்றி. ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் என் சினிமா வாழ்க்கையில், மிகவும் நெருங்கியவன் முக்கியமானவன். படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் & நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோ அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025