தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை 50% குறைப்பதாக ரகுல் ப்ரீத்தி சிங் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைக்க தயாராக வேண்டும் என்று தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங் தனது சம்பளத்தில் 50% குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களின் நிலையை மனதில் கொண்டு தனது சம்பளத்தை 50% ஆக குறைத்துள்ளார். ஏற்கனவே 1.5கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் ரகுல் ப்ரீத்தி இனி ரூ. 75லட்சத்திற்கு நடிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…