அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் சுகாதாரத் துறை அமைச்சரின் படம் இடம் பெற்றிருந்தது பற்றி பொதுவெளியில் எல்லோராலும் பகிரப்பட்ட தகவலைத், தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கட்சியின் தகவல் தொழிற்நுட்பப்பிரிவு செயலாளர் முத்துக்குமார் அவர்களை காவல்துறையினர் அதிகாலையில் திடீரென கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும், யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ ஆயிரம் பகிர்ந்த ஒரு பதிவுக்காக, முத்துக்குமாரைக் கைது செய்திருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மீது, எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், பழிவாங்கும் சிந்தனையோடும் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், முத்துக்குமாரை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர் மீதான பொய் வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…