சர்வர் சுந்தரம் அப்டேட் கொடுத்த சந்தானம்.?

சர்வர் சுந்தரம் வெளியீடு குறித்து நடிகர் சந்தானம் பேசியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி இவரது நடிப்பில் பல ஆண்டுகளாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் படம் சர்வர் சுந்தரம்.
இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தினை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், வைபவி ஷிந்திலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகியும் இந்த படம் வெளியாகாமல் உள்ளது. இதனையடுத்து நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் அப்போது ரசிகர் ஒருவர் சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்து கேட்டுள்ளார். அதற்கு சந்தானம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது என கூறியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025