சிஎஸ்கே உடன் இணைந்து சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் சிம்பு.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகர் சிலம்பரசன் சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல்-இல் எஞ்சியுள்ள போட்டிகள் தொடர உள்ளன. இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு சிஎஸ்கே அணி ஜெர்சி அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனையடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு போட்டோவை பதிவிட்டு, ஒரு செய்தியை குறிப்பிட்டுள்ளார். அதில், “CSK x STR சர்ப்ரைஸ்-க்கு தயாராக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் சிம்பு பாடுவதற்கு ரெடியாக ஸ்டூடியோவில் இருப்பது போல இருக்கிறது. அநேகமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு ஆல்பம் பாடல் பாட இருக்கிறார் என தோன்றசெய்கிறது.
CSK x STR get ready for the surprise ????
Any guesses ???#SilambarasanTR #Atman #CSK pic.twitter.com/KWB2Wniwwe— Silambarasan TR (@SilambarasanTR_) September 16, 2021
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025