டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12இன் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 113 ரன்கள் இலக்கு.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, பெரிய ஸ்கோர் எதுவும் எடுக்காமல் 20 ஓவர்களில் 112 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 32 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன் சிறப்பாக பந்துவீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை சாய்த்தார். இங்கிலாந்து அணிக்கு 113 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.