கௌதம் வாசுதேவ் மேனன் திரிஷாவிற்கு வீடியோ கால் ஐபோனை எப்படி வைத்து படம் பிடிப்பது, எந்த முறையில் வைக்க வேண்டும் கூறுகிறார்.
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில் தற்போது நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கௌதம் வாசுதேவ் மேனன் திரிஷாவிற்கு வீடியோ கால் ஐபோனை எப்படி வைத்து படம் பிடிப்பது, எந்த முறையில் வைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி கொடுக்கிறார். தற்போது ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் இணைந்து குறும்படம் ஏதாவது எடுக்க போகுறார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கெளதம் மேனன் இயக்கத்தில் திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவுடன் நாங்கள் படமாக்கியதை உங்களுக்கு காட்டுவதற்கு காத்திருக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஆண்ட்ரியா ஐபோனில் எடுக்கப்பட்ட குறும்படம் வெளியாகிது மட்டுமில்லாமல் ஊரடங்கிலும் பல பிரபலங்கள் சும்மா இருக்காமல் வீட்டிலிருந்தே விழிப்புணர்வு வீடியோவையும், பாடல்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…