தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான “சர்ரியலேரு நிவ்வரு” சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இவரது பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டாலும், இவர் நேரடியாக கடந்தாண்டு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்னும் திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றது. இவர் தனது 27வது திரைப்படத்தில் இரட்டையர்களாக நடிக்கிறார் என்றும் சில தகவல்கள் கசிந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது தனது தந்தையான பிரபல நடிகரான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டிலை போஸ்ட்ருடன் வெளியிட்டுள்ளார். “SarkaruVaariPaata” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ். எஸ். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிஎஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தை மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான GMB என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் ப்ளஸ் தயாரிக்கிறது. காதில் கடுக்கன் மற்றும் கழுத்தில் ஒரு ரூபாய் துட்டுடன் கூடிய அந்த போஸ்ட்ர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…