தளபதி 64-இல் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் அசத்தல் பெயர் என்ன தெரியுமா?

- தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது திரைப்படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது.
- இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.
தளபதி விஜய் தற்போது அவரது 64 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின்ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் தளபதி விஜய் உள்ளார்.
இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதற்காக தளபதி ரசிக்கர்கள் காத்திருக்கின்றனர். டிவிட்டரில் தற்போதே ட்ரெண்டிங்கில் டாப்பில் தளபதி 64 பற்றிய ஹேஸ்டேக் தான் இருக்கிறது.
இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்தில் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் ஜே.டி ( ஜேம்ஸ் துரைராஜ் ) என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025