தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளையொட்டி நேற்று தமிழக முதல்வர்,பிரதமர் மோடி என அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தந்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“என்னுடைய பிறந்த நாளன்று என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய என் அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. M.K. Stalin அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும்,என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கும், திரு ராஜ்நாத் சிங், திரு நிதின் கட்கரி, பாராளுமன்ற சபா நாயகர் திரு. ஓம் பிர்லா, பல் மாநில ஆளுநர்களுக்கும், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், திரு. O. பன்னீர் செல்வம், திரு G.K.வாசன், திரு. திருநாவுக்கரசர், திரு. T.K. ரங்கராஜன். திரு. பொன் ராதாகிருஷ்ணன். திரு. வைகோ, திரு. அண்ணாமலை. திரு அன்புமணி ராமதாஸ், திரு திருமாவளவன், திரு. சீமான், திரு. தினகரன்,
திருமதி. சசிகலா அவர்களுக்கும், மற்றும் பல மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரு. கமல் ஹாசன், திரு. இளையராஜா திரு. பாரதிராஜா, திரு. வைரமுத்து திரு. அமிதாப் பச்சன், திரு. ஷாருக்கான், திரு. சச்சின் டெண்டுல்கர். திரு. ஹர்பஜன்சிங், திரு. வெங்கடேஷ் ஐயர். மற்றும் பல பிரபலங்களுக்கும், திரை உலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும், ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும், என் நலனுக்காக கோயில்களில் பூஜைகளும், ஹோமங்களும், அன்னதானங்களும் நடத்தி வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும், தமிழக மக்களுக்கும் என் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…