நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் முக்கிய அப்டேட்!

நவம்பர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, 2 மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளது.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இப்படத்தின் ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இரண்டு மாதம் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, 2 மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பட குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஆனால் படப்பிடிப்பு முடிந்தாலும், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய 10 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து இப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025