நாங்க வேற மாறி பாடல் வெளியான 23 மணி நேரத்திலே 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாறி பாடலை நேற்று முன் தினம் இரவு 10.45 மணிக்கு சோனி மியூசிக் சேனலில் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடல் சில மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது. மேலும், தற்போது யூடியூபில் 9 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
தற்போது இந்த பாடல் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. அதாவது குட்டி ஸ்டோரி பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 1 மில்லியன்க்கும் மேல் லைக்குகளை பெற்றது. ஆனால், வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாறி பாடல் வெளியான 23 மணி நேரத்திலே 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஆனால் 24 மணி நேரத்தில் அதிகம் லைக் பெற்ற பாடல் என்ற சாதனை மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் தான் வைத்துள்ளது.நாங்க வேற மாறி பாடல் விரைவாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற பாடல் என்ற சாதனை படைத்துள்ளது
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…