வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம் – மிஷ்கின் பேச்சு.!

வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் தற்போது ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன் வைத்து செல்பி என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வெற்றிமாறன், மதிமாறன், மிஷ்கின், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மேலும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் கூறியதாவது… ‘ என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குநர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக்கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன்.
மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. வெற்றிமாறன் 24 மணி நேரமும் சினிமாவை நேசித்து நேசித்து படம் எடுக்கிறான்..அதன் அவனுக்கு வெற்றிகள் குவிகிறது. இந்தப்படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார்.
சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்லபடம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025