இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யுடன் பணியாற்றியது குறித்தும், விஜய் கூறிய சீக்ரெட்யும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது” பீஸ்ட் படத்தில் நடித்து மிகவும் சந்தோசம்…. நான் சீக்கிரத்தில் கோபப்படுவேன். என்னுடைய அம்மா அதற்காக என்னை கண்டிப்பார். பீஸ்ட் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் போது விஜய் சாரை பார்க்க என்னுடைய அம்மாவை அழைத்து சென்றேன்..
அழைத்து சென்று உங்களுக்கு நிச்சயம் விஜய் சாரை பிடிக்கும். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போதும் பொறுமையாகவும் கூலாகவும் இருப்பார்’ என்று என்னுடைய அம்மாவிடம் சொன்னேன்…
விஜய் சாரை சென்று சந்திக்கும்போது அம்மா அதைப் பற்றி அவரிடம் கேட்டார். “நீங்க யாரிடமும் கோபமே பட்டதில்லையா” என்று.. அதற்கு விஜய் சார் “நானும் எல்லோரையும் போல சாதாரண மனிதன் தான். எனக்கும் சில சமயம் கோபம் வரும், ஆனால் அதனைக் கட்டுபடுத்த எப்போதும் முயற்சிப்பேன்.” என பதில் கூறியுள்ளார்.
பணம் மற்றும் அதிகாரம் இருக்கும்போது நாம் கோபப்படுவதற்கான சூழலும் கிடைக்கும். ஆனால் அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் தொடர்ச்சியாகக் கோபப்படாமல் இருக்கவும் அதிகளவு மனவலிமை தேவை. அது விஜய் சாரிடம் அந்த சூப்பர் பவர் இருக்கிறது” என விஜய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…