TOKYO2020:பேட்மிண்டனில் பிவி சிந்து வெற்றி- இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு பதக்கம் ..!

TOKYO2020: PV Sindhu wins badminton - Another medal for India ..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சீனாவின் ஹி பி ஜியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,பிவி சிந்து ,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீன தைபேயின் தாய் சூ-யிங்கை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,18-21, 12-21 என்ற கணக்கில் தாய் சூ-யிங்கிடம் தோற்றார்.

இதனால்,இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிங் ஜியாவோவை,பிவி சிந்து எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பான நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் சிந்து வென்றார்.

இதனையடுத்து,இரண்டாவது செட்டிலும் 21-15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம்,ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கத்தை வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

unknown node