#BIG BREAKING: அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல் ..!

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் 46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், ஜோ பைடனின் வெற்றியை குடியரசு கட்சியை சார்ந்த அதிபர் டிரம்ப் ஒப்புக்கொள்ளாமல் பல குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
#BREAKING: ஜோ பைடன் வெற்றி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மேலும், தேர்தலில் மோசடி நடைபெற்றுளளதாக கூறி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார் என நாடாளுமன்றம் உறுதி செய்த நிலையில் அதிகார மாற்றத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேர்தல் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், ஜனவரி 20ஆம் தேதி முறையாக அதிகார மாற்றம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.