ஒரே நாளில் ரிலீசாக உள்ள இரு தனுஷ் திரைப்படங்கள்!

தனுஷ் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரிலீசிற்கு தயராகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் பல்வேறு காரணங்களால் தயராகியும் ரிலீசாகாமல் வெகுநாட்கள் கிடப்பில் இருந்து வந்தது.
இந்த படத்தை தற்போது வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் வாங்கி தற்போது வரும் வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது இதே நாளில் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி எக்ஸ்ட்ரானரி ஜர்னி ஆஃப் தி பகிர் எனும் திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.
ஒரே நாளில் இரு வேறு நாடுகளில் தனுஷின் இரு வெல்வேறு படங்கள் வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025