இங்கிலாந்து அரசியலில் நிலவி வந்த மூன்றரை ஆண்டு பிரச்சனைக்கு நேற்று முன்தினம் தீர்வு காணப்பட்டது.கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என இங்கிலாந்து மக்கள் வாக்களித்தனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதை பிரக்சிட் என அழைக்கப்படுகிறது. இதற்கான மசோதாவை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றமுடியாமல் திணறி வந்தது. இந்த மசோதாவை நிறைவேற்ற முன்னாள் பிரதமர் தெரசா மே பல நடவடிக்கைகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இதனால் அவர் பதவி விலகினார்.பின்னர் பதவியேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியேற்று சமீபத்தில் ஆட்சியை கலைத்து மீண்டும் பிரதமர் ஆனார்.பின்னர் அவர் மேற்கொண்ட தொடர் முயற்சி காரணமாக பிரக்சிட் மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி சம்பிரதாய படி ஒப்புதல் கொடுத்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் வருகின்ற 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதி ஆகிவிட்டது.இந்த மசோதா வருகின்ற 29-ம் தேதி ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.அங்கு இந்த மசோதாவை தடுக்க அதிகாரம் இல்லை என்பதால் பிரக்சிட் மசோதா நிறைவேற்றபடுவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் வருகின்ற 30-ம் தேதி நள்ளிரவு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்திற்கு முறைப்படி அனுமதி கொடுப்பார்கள். இதனால் வருகின்ற 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…