உக்ரைன் ரஷ்யா இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.இந்த பேச்சுவார்த்தை மூலம் தற்போது முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்துள்ளது.
நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக, குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துகிறது.இதனால்,உக்ரைன் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.எனினும்,தங்கள் நாட்டை காக்க உக்ரைன் ராணுவத்தினரும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் உயிரைக் காப்பற்றிக் கொள்ள உக்ரைன் மக்கள் மற்றும் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் உட்பட பிற நாட்டு மாணவர்களும் சுரங்க அறைகளில் தங்கியுள்ளனர்.எனினும்,உக்ரைன் மக்களில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதே சமயம்,அங்குள்ள இந்தியர்களை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில்,உக்ரைன் -ரஷ்யா இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.முன்னதாக அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,தற்போது அதை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனைகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில்,உக்ரைன் ரஷ்யா இடையே இன்று பெலாரஸ்-இல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தற்போது பெலாரஸ் அரசு மேற்கொண்டுள்ளது.
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…