திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம்.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே.இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் போது ரசிகர்கள் குவிந்தனர்.
மேலும், அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…