கர்ப்பிணி பெண்ணுக்கு 5000ரூ நிதியுதவி செய்த நடிகர் விஜய் !

கர்ப்பிணி பெண்ணுக்கு 5000ரூ நிதியுதவி செய்த நடிகர் விஜய்.
தேனியில் காதல் ஜோடி அமீன் மற்றும் கண்சுலாபீவி கடந்த 4 மாதங்களாக வசித்து வருகின்றனர். அமீன் மனைவி கண்சுலாபீவி 5 மாத கர்ப்பிணி பெண் ஆவார். கொரோனா ஊரடங்கில் அமீன் வேலைக்கு செல்ல முடியாததால் மனைவியின் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வந்தார். தேனி வந்தடைந்து 4 மாதங்களே ஆன நிலையில் குடும்ப அட்டை இல்லாமல் ரேசன் பொருட்கள் இல்லாமலும் தவித்து வந்தனர்.
இதை தேனி விஜய் ரசிகர் மன்றத்தினர் நடிகர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் நடிகர் விஜய் அமீன் மனைவியின் மருத்துவ செல்விற்கு 5000 ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.