‘அனபெல் சேதுபதி’ படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நேரடியாக வெளியாகிறது
இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப் சி நடித்துள்ளார். ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தான் முடிவடைந்துள்ளது. நேற்று படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், தற்போது “அனபெல் சேதுபதி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேரடியாக இந்த திரைப்படம் டிஸ்னிப் + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, மலையாம் என 5 மொழிகளில் வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. திகில் கலந்த காமடி படமாக உருவாக்கபட்டுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏற்கனவே விஜய் சேதுபதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தி பீட்சா என்ற திகில் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…