என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியீடபட்டுள்ளது.
இயக்குனர் பிரபுஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. ஆர்.எஸ் கார்த்தி கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியான பீச்சாங்கை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் குண பாலசுப்ராமணியன் என்பவர் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் சதன் எஸ் மற்றும் ஜி ஜெயராம் இணைந்து தயாரிக்கின்றார்கள். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது டைட்டிலுடன் வெளியீடபட்டுள்ளது. போஸ்டரில் பல கருவிகளுடன் கலப்பின உடையணிந்த இசைக்கலைஞர் வேடத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி இருக்கிறார். இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த போஸ்ட்ரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…