நியூயார்கில் கொரோனாவால் உருவான பேய் சமையலறை ! எது பேயா ?

நியூயார்கில் உள்ள சமையலறை கொரோனாவால் பேய் சமையலறையாக மாறி பிரபலம் அடைந்து வருகிறது.பேய் ஏதும் சமைக்குமோ வாருங்கள் பாப்போம்.
கொரோனாவின் ஆட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை 1 வருடம் கடந்தோடிவிட்டது.இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஒரு சமையலறை ,பேய் சமையலறை என்ற பெயரில் பிரபலம் அடைந்து வருகிறது.அங்கு சென்று உணவு வாங்கவோ ,சாப்பிடவோ முடியாது.அதற்கு மாற்றாக அவர்கள் உணவுகளை டோர் டெலிவரி செய்கிறார்கள்.ஏன் இந்த பெயர் வரக் காரணம் என்று பார்த்தால் இந்த சமையலறை ,நம்ம ஊறு இருட்டுக்கடை மாதிரியாம். எப்பவும் இருட்டாகத்தான் இருக்குமாம்.
கொரோனாவால் பள்ளிகள், கல்லூரிகள் ,வணிக வளாகங்கள் முதல் முதல் உணவகங்கள் வரை இன்னும் பழைய நிலைக்கு மீளமுடியாமல் தவித்து வருகிறது.ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு இன்னும் பல நாடுகளில் தொடர்கிறது.மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்னும் சந்தையில் தெளிவான பார்வைக்கு வரவில்லை.இதனால் மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுவதால் இந்த பேய் சமையலறை போன்ற ஆன்லைன் டெலிவரி அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.