ஜீ தமிழிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய பிரபல தொகுப்பாளினி.! பிரியங்காவிற்கு போட்டியாக இவரா.?

விஜய் டிவியில் காதலர் தின ஸ்பெஷலாக’காதலே காதலே’எனும் புது நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார்.
விஜய் டிவியில் ஹைலைட்டாக பேசப்படுபவர்கள் என்றால் அது தொகுப்பாளர்கள் தான் .அந்த வகையில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் என்று பிரியங்கா, மாகாபா ஆனந்த்,டிடி ,கோபிநாத் ஆகியோர் பிரபலமானவர்கள் . அதிலும் தனது நகைச்சுவை பேச்சால் பலரையும் கவர்ந்தவர் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர்,ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவிற்கு போட்டியாக புது தொகுப்பாளினியை விஜய் டிவி இறக்க உள்ளது .
ஆம் முதலில் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சமீபத்தில் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பிரபலமான அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, காதலர் தின ஸ்பெஷலாக ‘காதலே காதலே’ எனும் புது நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார். அதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025