அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு என்ற இன நாயை வளர்த்து வருகிறார்.அந்த நாய்க்கு ஜாக்சன் என செல்லமாக பெயரும் வைத்து வளர்த்து வந்து உள்ளார்.
கடந்த வாரம் எமிலி தளர்மோ அந்த நாயுடன் கடைக்கு சென்றார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த எமிலி தளர்மோ பல இடங்களில் தனது நண்பர்களுடன் தேடியும் ஜாக்சன் கிடைக்கவில்லை. ஜாக்சனை கடந்த 5 வருடமாக வளர்த்து வந்ததால் எமிலி மிகவும் மனவருத்தம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து ஜாக்சன் போட்டோவை விமான பயணிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கொடுத்து விசாரித்தார். ஆனாலும் ஜாக்சனை கண்டுபிடிக்க முடிய வில்லை.பின்னர் ரூ.85,000 ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஒக்லாந்து பகுதிகளில் 2 மணி நேரம் ஜாக்சனை தேடி உள்ளார்.
மேலும் நாயின் புகைப்படத்துடன் கூடிய பேனரை விமானத்தில் கட்டி பறக்கவிட்டபடி ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.இந்நிலையில் தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு 7 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்) பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…