ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு பொருட்கள் தரமானவையா என்பதை நம்பிக்கைக்கு உட்பட்டு வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு நவீனமயமாதல் காரணமாக கலப்படம் உருவாகியது. இதற்கு முக்கியக் காரணம் தொழிற்போட்டி என்று கூறினாலும் பேராசையும் ஒரு காரணமாகிவிட்டது. முக்கியமாக உணவுப்பொருள் கலப்படம் அதிக அளவில் நடக்கத் துவங்கியது.இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவையான ஒன்றாகும். விடுதலையடைந்த பிறகு இந்தியாவில் நடுத்தர மக்களிடம் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.அய்.எஸ்.ஓ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதியே உலகத் தர தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்படுகின்றன. பன்னாட்டு தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு உயர் அமைப்பாக உலகத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விளங்குகிறது.இந்தியத் தர நிர்ணய அமைப்பு (அய்.எஸ்.அய்) ஆரம்ப காலத்திலிருந்தே, உலகத்தர நிர்ணய நிறுவனம், உலக மின்தொழில் நுட்பக்குழு ஆகிய நிறுவனங் களோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியத் தர நிர்ணய நிறுவனம், உலகத் தர நிர்ணய நிறுவனத்தின் தொழில் நுட்பக்குழுக்கள், உலக மின்தொழில் நுட்பக் குழுக்கள், தொழில் நுட்பக் குழுக்கள் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.
இன்று அக்டோபர் 14 உலகத் தர நிர்ணய நாள்....!
ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு பொருட்கள் தரமானவையா என்பதை நம்பிக்கைக்கு உட்பட்டு வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு நவீனமயமாதல் காரணமாக கலப்படம்
unknown node