unknown node
இந்தியா – இலங்கை இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் பல்லகெலேவில் இன்று நடைபெறுகிறது.இந்த போட்டி மதியம் 2:30 மணி அளவில் பகல் -இரவு போட்டியாக நடைபெறுகிறது.
இந்திய அணி, இந்த ஆட்டத்தில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறது.ஆனால், இலங்கை அணி தொடர் தோல்வியினால் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியோடு களம் காணுகிறது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது.இலங்கை அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் தடுமாறி வருகிறது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சர்களால் செல்லப்படுகிறது.