unknown node
திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை அருகே மூன்று மாடிக் கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இடிந்து விழுந்த கட்டடத்தில் 6 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.கட்டடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.