இங்கிலாந்து மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் முறையே 1-2 , 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது தெ.ஆ. இதையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபாரமாக வென்றது. இதையடுத்து நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் பிடித்தது.
டீன் எல்கர், ஹெயினோ குன் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் அஷீம் ஆம்லாவும், குயின்டன் டீ காக்கும் இணைந்து அணியை மீட்டனர். ஆம்லா 78 ரன்களிலும், டீ காக் 68 ரன்களிலும் அவுட் ஆயினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபாப் டு பிளசிஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். தெம்பா பவுமாவும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெர்னோன் பிலாந்தரும், கிறிஸ் மோரிஸும் இணைந்து அணியை மீட்டனர். பிலாந்தர் அரை சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டமுடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா.
இன்றைய தினம் நானூறு ரன்களை நோக்கித் தென் ஆப்பிரிக்க அணி பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே பிலாந்தர் அவுட் ஆனார். இதன் பின்னர் மற்ற வீரர்களும் விரைவிலேயே அவுட் ஆகினர். இதையடுத்து, 335 ரன்களுக்கு இன்னிங்சை இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. இன்றைய தினம் முதல் 6.2 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தற்போது இங்கிலாந்து 126/2 (27 over) என்ற நிலையில் ஆடிவருகிறது