5 கோடி வேண்டாம் : காஜல் திடீர் முடிவு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அவர் மகிழ்ச்சியில்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

unknown node

கைதி நெ.150, நேனே ராஜு நேனே மந்திரி, விவேகம் என தொடர்ந்து அவரது படங்கள் ஹிட். அடுத்து விஜய் நடிப்பில் வரவுள்ள மெர்சல் படத்தில் மூன்று ஹீரோயின்களில் காஜலும் ஒருவர். படம் தீபாவளிக்கு வெளியாவதால் அவர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்.காஜல் அடுத்து குயின் ரீமேக்கில் நடிக்கவுள்ளது அனைவர்க்கும் தெரியும். இந்த படத்தை அவர் ஒப்புக்கொண்ட பிறகு இரண்டு படவாய்ப்புகள் அவரை தேடி வந்துள்ளது.இரண்டு படங்களையும் சேர்த்து அவருக்கு 5 கோடி சம்பளம் கிடைத்திருக்கும், ஆனால் அவை பெண்களை மையப்படுத்திய கதை என்பதால் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலர் இப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில், காஜல் கண்டிப்பாக நோ சொல்லியுள்ளார்.

“அந்த பட்டியலில் நான் சேர விரும்பவில்லை” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

5 கோடி வேண்டாம் : காஜல் திடீர் முடிவு