பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி..!

பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

முஸாபர்பாத் அருகில் உள்ள நீலம் பள்ளத்தாக்கிற்கு லாகூர் மற்றும் பைசலாபாத் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்தனர்.

சிறிய மரப்பாலம் ஒன்றில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாலம் திடீரென அறுந்து விழுந்தது.

இதில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 7 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 25 மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து மீட்புப் பணியிலும், மாணவர்களைத் தேடும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.