மருத்துவ மாணவர்களுக்கான 85% ரத்து...தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் மருத்துவர்கள் கருத்து...!

மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கான 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

unknown node

மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கான 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்டப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தரத் தீர்வை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலச் செயலர் டாக்டர் பாலகிருஷ்ணன்: முதுநிலை மாணவர் சேர்க்கையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றது போன்று, இந்த விவகாரத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் மாநிலப்பாடத்திட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ராமலிங்கம்: மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழங்கும் முடிவை மசோதாவாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அதனைத் தொடர்ந்து அரசாணை பிறப்பித்திருந்தால், அதனை 6 மாத காலத்துக்கு சட்டப்பூர்வமாக எதுவும் செய்ய முடியாது. இதுபோன்ற சட்டச் சிக்கல்கள் எதுவும் வந்திருக்காது. எனவே, தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்: உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு நுழைவதைத் தடுக்க வேண்டும். அதன்பின்பு வருங்காலத்தில் தமிழக அரசு மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.