ஏர் பஸ் விமானம் ஒன்றையும் செங்குத்தாக மேலெழுப்பி விமானி சாதனை..!

போர் விமானங்களைப் போல பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏர் பஸ் விமானம் ஒன்றையும் செங்குத்தாக மேலெழுப்பி விமானி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

போர் விமானங்களைப் போல பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏர் பஸ் விமானம் ஒன்றையும் செங்குத்தாக மேலெழுப்பி விமானி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பெர்லின் நகரில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டது.

பொதுவாக போர் விமானங்கள் மட்டுமே புறப்பட்ட சில நொடிகளில் செங்குத்தாக மேலெழும்பும் திறன் கொண்டவை.

ஆனால் போர் விமானங்களை விட பல மடங்கு பெரியதாகவும், அதிக எடையும் கொண்ட பயணிகள் விமானம் அதேபோல் செங்குத்தாக மேலே எழுப்பப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.