ஜூன் முதல் விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு..!

ஏர் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல், மும்பையிலிருந்து ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகருக்கு விமானங்களை இயக்குகிறது.

ஏர் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல், மும்பையிலிருந்து ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகருக்கு விமானங்களை இயக்குகிறது.

ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட் நகருக்கு, ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே டெல்லியிலிருந்து விமான சேவை அளித்து வருகிறது. மும்பையிலிருந்தும் அந்த நகருக்கு விமானங்களை இயக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன.

அதன்பேரில், இந்த முடிவு எடுக்கப் பட்டிருப்பதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி, மும்பையிலிருந்து வாரம் 3 முறை ஃப்ராங்க்ஃபர்ட் நகருக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.