கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, ராமராயர், தேனூர் மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார். பின்பு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
unknown nodeநேற்றுமுன்தினம் இரவு ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளினார். அங்கு விடிய விடிய தசாவதார கோலங்களில் கள்ளழகர் காட்சி தந்தார். முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகனாவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் கள்ளழகரை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
unknown nodeஇன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தார்கள்.
unknown nodeஅதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆகி அங்கிருந்து அழகர் மலை நோக்கி புறப்பாடாகிறார்.மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு இருப்பிடம் சென்று அடைகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்