பள்ளிப்பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்..!

திருவண்ணாமலை அருகே கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புக்காக மாணவர்கள் சென்ற முருகையன் நினைவு மேல்நிலை பள்ளிப்பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர்

திருவண்ணாமலை அருகே கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புக்காக மாணவர்கள் சென்ற முருகையன் நினைவு மேல்நிலை பள்ளிப்பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை அணைக்கரை பகுதியில் முருகையன் நினைவு மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலையில் சிறப்பு வகுப்பிற்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்தது.  தச்சம்பட்டு அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 மாணவற்களுக்கு காயம் ஏற்பட்டது.

தமிழக அரசின் உத்தரவையும் மீறி கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தும் முருகையின் நினைவு பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது