சமீப காலமாக தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பஜ்ரங்கி பைஜான் உள்ளிட்ட பல இந்திய படங்கள் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளிய நிலையில் தற்போது பாகுபலி 2 படம் இன்று அங்கு வெளியாகியுள்ளது.
முதல் நாளில் மட்டும் $2.85 Million வசூலித்துள்ளதாக தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய ருபாய் மதிப்பில்19 கோடி ருபாய்ஆகும்.
இது தங்கல் மற்றும் பஜ்ரங்கி பைஜான் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீனாவில் பாகுபலி முதல் பகுதியின் மொத்த வசூலையும் பாகுபலி 2 முதல் நாளிலேயே மிஞ்சிவிட்டது.