அனிதாவின் மரணத்தை அரசுகள் தவிர்த்திருக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு குறிப்பிட்டார்.சூலூர் அருகே, கண்ணம்பாளையத்தில் “வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, அக்கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, ஆர்.நல்லகண்ணு தினமணிக்கு அளித்த பேட்டி: அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு விவகாரத்தில் உரிய நேரத்தில் தக்க முடிவு எடுக்காததால் மாநில பாடப் பிரிவின்கீழ் படித்த பலர் உயர் மதிப்பெண் பெற்றும் இன்றைக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்துள்ளனர்.நீட் தேர்வு குறித்து உரிய நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்திருந்தால் அனிதாவின் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றார்.
அனிதா மரணத்தை அரசுகள் தவிர்த்திருக்கலாம்: ஆர்.நல்லகண்ணு
அனிதாவின் மரணத்தை அரசுகள் தவிர்த்திருக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு குறிப்பிட்டார். சூலூர் அருகே, கண்ணம்பாளையத்தில்
unknown node