ஜஸ்டின் பைபர் பாடுவதற்கு தடை!!

பிரபல பாப் ஸ்டார் ஜஸ்டின் பைபர், சீனாவில் பாடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பைபர், மேடையிலோ அல்லது வேறு இடத்திலோ பாடுவதற்கு தடை விதித்து

unknown node

பிரபல பாப் ஸ்டார் ஜஸ்டின் பைபர், சீனாவில் பாடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பைபர், மேடையிலோ அல்லது வேறு இடத்திலோ பாடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சீனா. இந்த திடீர் தடை உத்தரவு குறித்து சீன அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜஸ்டின் பைபர் மிகவும் திறமைமிக்க பாடகர். இருப்பினும் அவர் சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் நபரும் ஆவார். எங்களைப் பொறுத்த வரையில் அவர் தொடர்ச்சியாக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிகிறது. அவர் முன்னர், சீனாவுக்கு வந்த போதும் மோசமான நடத்தையை வெளிப்படுத்தினார். எனவே அவர் சீனாவில் பாடுவதிலிருந்து தடை செய்கிறோம். அவரின் நடத்தையை மாற்றிக் கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.