தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம்−ஓர் பார்வை...!

1542களில் புனித சவேரியார் தூத்துக்குடிக்கு வருகை தந்த போது பனிமய மாதா ஆலயம் இருக்கவில்லை. சிறு சிற்றாலயமாகவே அவர் முதலில் இந்த ஆலயத்தை

unknown node

பனிமய மாதா அறிமுகம்:முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடிக்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்று பனிமய மாதா பேராலயம், வங்கக்கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயம், தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கிறிஸ்த்துவ தேவாலயம், தூத்துக்குடி நகரின்  தெற்கு கடற்கரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த பேராலயம் ஆன்மீக தலமாக மட்டுமின்றி சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

unknown node

ஸ்தல வரலாறு:1535−1537 ஆண்டுகளிலேயே மீனவ இன மக்கள் கிறிஸ்துவ மதம் மாறினாா்கள். அவா்களின் ஊர் தலைவர்களின் தலைமையில் 85 பட்டம்கட்டிமார்கள் முதலில் மதம் மாறி, அதன் பிறகு 20,000 பரதர்கள் மதம் மாறினாா்கள். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீக தொண்டு ஆற்றவும், தலைமை ஏற்கவும் குருமார்கள் எவருமே இல்லை.

unknown node

இதனால் போப் மூன்றாம் சின்னப்பரால் கத்தோலிக்க சபை குருமார்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவர்கள் 1579ம் ஆண்டில் தூத்துக்குடியில் ஒரு புதிய தலைமை இல்லத்தை கட்டி எழுப்பினர். புனித இராயப்பர் ஆலயமே தூத்துக்குடி வாழ் கத்தோலிக்கர்களுக்கு முதல் பங்கு ஆலயமாக விளங்கியது. ஆரம்பத்தில் இயேசு சபை குருக்கள் புனித இராயப்பர் ஆலயத்தின் பங்கு பொறுப்புகளில் இருக்கவில்லை. இதன் காரணமாக அவா்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீக சேவைகளுக்கென தங்களுக்கென்ற தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடி ஓர் ஆலயத்தை உருவாக்கினா். இவ்வாலயம் ஆரம்பத்தில் இரக்கத்தின் மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

unknown node

1542களில் புனித சவேரியார் தூத்துக்குடிக்கு வருகை தந்த போது பனிமய மாதா ஆலயம் இருக்கவில்லை. சிறு சிற்றாலயமாகவே அவர் முதலில் இந்த ஆலயத்தை எழுப்பினார். இந்த பேராலயத்தில் தற்போது இருக்கும் பனிமய மாதாவின் திருமேனி 09.06.1555 அன்று “சந்தலேனா” என்ற கப்பலின் மூலம் ரோம் நகரில் இருந்து கொண்டுவரப்பட்டது. 1582ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாக எழுப்பினர். 1582ம் ஆண்டு ரோம் நகரில் உள்ள பனிமய மாதா பேராலயத்தின் நேர்ந்தளிப்பு நாளான ஆகஸ்டு 5 அன்றே இங்கு அர்ச்சிக்கப்பட்டு, முதல் திருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. 1713ம் ஆண்டு தற்போதுள்ள ஆலயம் எழுப்பப்பட்டது. இது போர்ச்சுக்கீசிய கலை நுட்பத்தில் கட்டப்பட்டது. 1982ம் ஆண்டில் இந்த பேராலயத்தின் 400வது ஆண்டு விழாவை முன்னிட்டு இதை பேராலயமாக (பசிலிக்கா) தரம் உயர்த்தினார்கள்.

இந்த ஆலையமானது தற்போது இந்திய கத்தோலிக்க திருச்சபையின் பராமரிப்பிலும்,இந்திய அரசாங்கத்தின் அங்கிகாரத்தொடும் செயல்படுகிறது.05.08.2017 இன்று இந்த பேராலயத்தின் 435வது ஆண்டு விழா சமய, வர்ண பேதமின்றி அனைவராலும் இன்று கொண்டாடப்பட்டும் வருகிறது. விழாவை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ஆண்டுதோறும் வழங்கப்படும் வழக்கம். மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தமிழக அரசு சார்பில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அ.சுந்தர்தூத்துக்குடி