அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.ஏ, எம்.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டபடிப்புகளான எம்.ஏ., எம்.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம்

unknown node

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டபடிப்புகளான எம்.ஏ., எம்.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தப் பல்கலைக்கழகத்தில் 2017}18}ஆம் ஆண்டுக்கு எம்.ஏ, எம்.காம், எம்.லைப்ரரி சயின்ஸ், பி.லைப்ரரி சயின்ஸ், எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யூ, எம்.ஹெச்.எஸ்.எஸ், எம்.ஆர்.எஸ், எம்.எல்.சி. கடல் அறிவியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள், பிபிஇடி, எம்பிஇடி, எம்பிடி, எம்.எஸ்சி. நர்சிங், டென்டல் மெக்கானிக்ஸ் சான்றிதழ் படிப்புகள், இசைத் துறைப் படிப்பு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் பதிவு செய்வது 8}5}2017 முதல் தொடங்கப்பட்டு, 14.7.2017 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது, இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் தேதி வருகிற 4.8.2017, மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.