unknown node
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லட்சுமிபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மகள் கெளசல்யா(25). இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு இம்மாத இறுதியில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடதக்கது. இளம் பேராசிரியையின் உயிரழப்பு இப்பகுதியில் பெரும் சோகத்தையும் வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது.