விஜய் டி.வியில் பிலிம்பேர் விருது விழா

64வது பிலிம் பேர் விருது வழங்கும் விழா கடந்த ஜுன் மாதம் 17ந் தேதி ஐதராபாத்தில் உள்ள எச்ஐசிசி காம்பளக்சில் நடந்தது. இதில் தென்னிந்திய மொழிகளில் 2016ம்

unknown node

64வது பிலிம் பேர் விருது வழங்கும் விழா கடந்த ஜுன் மாதம் 17ந் தேதி ஐதராபாத்தில் உள்ள எச்ஐசிசி காம்பளக்சில் நடந்தது. இதில் தென்னிந்திய மொழிகளில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்கள், படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழில் ஜோக்கர் சிறந்த படமாகவும், இறுதிச்சுற்று சுதா கொங்கரா சிறந்த இயக்குனராகவும், மாதவன் சிறந்த நடிகராகவும், ரித்திகா சிங் சிறந்த நடிகையாகவும், சமுத்திரகனி சிறந்த குணசித்ர நடிகராகவும், சாய் தன்ஷிகா சிறந்த குணசித்ர நடிகையாகவும், ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசை அமைப்பாளராகவும், தேர்ந்தெடுக்கபட்டு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது, இந்த நிகழ்ச்சியை விஜய் டி.வி. நாளை மறுநாள் (ஞாயிறு) மாலை 4 மணிமுதல் ஒளிபரப்புகிறது, இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.