மீனவர் குத்திக் கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மீனவரை கத்தியால் குத்தி கொலை செய்த மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி லயன்ஸ் டவுண் அருகே உள்ள

unknown node

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மீனவரை கத்தியால் குத்தி கொலை செய்த மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி லயன்ஸ் டவுண் அருகே உள்ள பிவிஆர் புரத்தைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் மைக்கேல் லசிங்டன் (31). மீனவர். இவரது மனைவி லூர்தம்மாள். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. 10 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த நாள் முதல், கனவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கனவரை பிரிந்து லூர்தம்மாள் சண்முகபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், லூர்தம்மாளின் தம்பி மேன்சன் (25), தனது சகோதரியை கணவருடன் சேர்த்து வைக்க எண்ணி நேற்று இரவு லசிங்டனிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றாராம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மேன்சன் லசிங்டனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மைக்கேல் லசிங்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியோடிய மேன்சனை போலீசார் தேடிவருகின்றனர்