கமுதி:நீட்தேர்வால் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு எட்டாக்கனியாகி விடும், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பேசியதாவது: மதங்களுக்கு அப்பாற்பட்ட அப்துல்கலாமை, மதசாயம் பூச நினைக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் தமிழகத்தில் கிராமபுற மாணவர்களின் டாக்டர் கனவு எட்டாக்கனியாகிவிடும். குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் அரசுகள், நீட் தேர்வால் பாதிக்கப்படும் கிராமபுற மாணவர்களுக்கு குரல் கொடுக்க தயக்கம் காட்டுகிறது.கமுதி பகுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க 5 ஆயிரம் ஏக்கர், 20 கிராம மக்களை வெளியேற்றியது மின் உற்பத்தி தகடுகளை சுத்தம் செய்ய தினமும் 2 லட்சம் குடிநீர் என, 20 லட்சம் லிட்டர் குடிநீரை எடுத்துவரும் மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை கண்டித்து, போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது கண்டிக்கதக்கது, என்றார்.இவ்வாறு தெரிவித்தார்.
நீட்தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் அபாயம்:சீமான் பேட்டி
கமுதி:நீட்தேர்வால் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு எட்டாக்கனியாகி விடும், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர்
unknown node